WPL 2023: டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ் - போட்டி முன்னோட்டம் & ஃபேண்டஸி லெவன்!
மகளிர் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதலாம் ஆண்டு சீசன் விறுவிறுப்பு சற்றும் பஞ்சமில்லாமல் ரசிகர்களுக்கு விருந்துபடைத்து வருகிறது. அதிலும் இதில் 4 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ள நிலையில் ஒவ்வொரு போட்டியிலும் அதிரடி மற்றும் சுவாரஸ்யத்திற்கும் பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது.
இதில் இன்று நடைபெறும் 5ஆவது லீக் ஆட்டத்தில் மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
Trending
போட்டி தகவல்கள்
- மோதும் அணிகள் - டெல்லி கேப்பிட்டல்ஸ் vs யுபி வாரியர்ஸ்
- இடம் - டிஒய் பாட்டில் மைதானம், நவி மும்பை
- நேரம் - இரவு 7.30 மணி
போட்டி முன்னோட்டம்
மெக் லெனிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடரின் முதல் போட்டியிலேயே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அபார வெற்றியைப் பதிவுசெய்தது. அதிலும் குறிப்பாக ஷஃபாலி வர்மா, மெக் லெனிங், மரிசேன் கேப், ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
அதேசமயம் பந்துவீச்சு துறையில் ஷிகா பாண்டே, ராதா யாதவ், அருந்ததி ரெட்டி ஆகியோருடன், முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்திய தாரா நோரிஸும் இருப்பதும் அணியின் பலத்தை பன்மடங்காக கூட்டியுள்ளது.
மறுபக்கம் அலிசா ஹீலி தலைமையிலான யுபி வாரியர்ஸ் அணி கிரன் நவ்கிரே, கிரேஸ் ஹேரிஸ் ஆகியோரது அதிரடியான ஆட்டத்தின் காரணமாக த்ரில் வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. அதிலும் கிரேஸ் ஹேரிஸ் பரபரப்பான இறுதிகட்டத்திலும் அபாரமாக செயல்பட்டது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் அலிசா ஹீலி, ஸ்வேத செஹ்ராவத், தஹிலியா மெக்ராத் ஆகியோர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். மறுபக்கம் பந்துவீச்சு துறையில் தீப்தி ஷர்மா, சோபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஷ்வரி கெய்க்வாட் ஆகியோர் இருப்பது அணியின் பலமாக பார்க்கப்படுகிறது.
உத்தேச லெவன்
டெல்லி கேப்பிட்டல்ஸ் - ஷஃபாலி வர்மா, மெக் லானிங் (கே), மரிசான் கேப், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்ஸி, ஜெஸ் ஜோனாசென், தனியா பாட்டியா, அருந்ததி ரெட்டி, ஷிகா பாண்டே, ராதா யாதவ், தாரா நோரிஸ்
யுபி வாரியர்ஸ் - அலிசா ஹீலி (கே), ஸ்வேதா செஹ்ராவத், தஹ்லியா மெக்ராத், தீப்தி ஷர்மா, கிரேஸ் ஹாரிஸ், சிம்ரன் ஷேக், கிரண் நவ்கிரே, தேவிகா வைத்யா, சோஃபி எக்லெஸ்டோன், அஞ்சலி சர்வானி, ராஜேஸ்வரி கயக்வாட்.
ஃபேண்டஸி லெவன்
- விக்கெட் கீப்பர்கள் - அலிசா ஹீலி
- பேட்டர்ஸ் - மெக் லானிங், கிரேஸ் ஹாரிஸ், ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆலிஸ் கேப்ஸி, கிரண் நவ்கிரே
- ஆல்-ரவுண்டர்கள் - மரிசானே கப், தீப்தி சர்மா, ஷஃபாலி வர்மா
- பந்துவீச்சாளர்கள் - சோஃபி எக்லெஸ்டோன், தாரா நோரிஸ்
Win Big, Make Your Cricket Tales Now