PAK vs ENG, 1st Test: பாகிஸ்தான் பிளேயிங் லெவன் அறிவிப்பு; ஷாஹீன், நஷீம் ஷா ரிட்டர்ன்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும் பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவன் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்த அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி எதிர்வரும் அக்டோபர் மாதம் 7ஆம் தேதி தொடங்கும் இந்த டெஸ்ட் தொடரானது அக்டோபர் 28ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது.
மேலும் இத்தொடரின் முதலிரண்டு டெஸ்ட் போட்டிகளும் முல்தான் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், மூன்றாவது போட்டி மட்டும் ராவல்பிண்டியில் நடைபெறவுள்ளது. அதன்படி பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை முல்தானில் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு இத்தொடரில் பங்கேற்கும் இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் டெஸ்ட் அணிகளை அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தன.
Trending
அதன்படி இதையடுத்து பாகிஸ்தான் சென்றடைந்துள்ள இங்கிலாந்து அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசமயம் பாகிஸ்தான் டெஸ்ட் அணியும் இப்போட்டிக்காக தீவிரமாக தயாராகி வருகிறது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை நடைபெறவுள்ள நிலையில், இப்போட்டிக்காக இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவனில் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. இதன் காரணமாக இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் கேப்டனாக ஒல்லி போப் செயல்படவுள்ளார். அதேசமயம் காயத்தில் இருந்து மீண்டுள்ள ஸாக் கிரௌலியும் மீண்டும் இங்கிலாந்து பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு அறிமுக வீரரான பிரைடன் கார்ஸூக்கு இப்போட்டியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கான பாகிஸ்தான் அணியின் பிளேயிங் லெவனையும் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. அந்தவகையில் ஷான் மசூத் தலைமையிலான இந்த அணியில் ஷாஹீன் அஃப்ரிடி, நசீம் ஷா மற்றும் அமர் ஜமால் ஆகியோர் மீண்டும் பாகிஸ்தான் பிளேயிங் லெவனில் இணைந்துள்ளனர். வங்கதேசத்திற்கு எதிரான கடைசி டெஸ்டில் இவர்கள் மூவரும் அணியின் பிளேயிங் லெவனில் இடம்பிடிக்கவில்லை.
இதில் ஷாஹீஃப் அஃப்ரிடி மற்றும் நஷீம் ஷா ஆகியோர் பிளேயிங் லெவனில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர். அதேசமயம் அமர் ஜமால் காயம் காரணமாக வங்கதேச டெஸ்ட் தொடரில் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களைத் தவிர்த்து பாபர் ஆசாம், அப்துல்லா ஷஃபிக், முகமது ரிஸ்வான், அப்ரார் அஹ்மத், சௌத் சகீல் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் இத அணியில் இடம்பிடித்துள்ளனர்.
பாகிஸ்தான் பிளேயிங் லெவன்: ஷான் மசூத் (கேப்டன்), சவுத் ஷகீல், சைம் அயூப், அப்துல்லா ஷபீக், பாபர் ஆசாம், முகமது ரிஸ்வான், சல்மான் அலி ஆகா, அமீர் ஜமால், ஷஹீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, அப்ரார் அகமது.
Also Read: Funding To Save Test Cricket
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஸாக் கிரௌலி, பென் டக்கெட், ஒல்லி போப் (கே), ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், பிரைடன் கார்ஸ், ஜேக் லீச், ஷோயப் பஷீர்.
Win Big, Make Your Cricket Tales Now