
பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பு ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரானது வரும் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது. ஒருநாள் தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்துள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதில் எட்டு அணிகளும் இரு குழுக்களாக பிரிந்து இத்தொடரை எதிர்கொள்கின்றனர்.
இதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து மற்று வங்கதேச அணிகளும், குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஃப்கானிஸ்தான் அணிகளும் இடம்பிடித்துள்ளன. மேலும் இத்தொடருக்கான அணிகளை அறிவிக்க இன்றே (ஜன.12) கடைசி நாள் என ஐசிசி கெடுவித்திருந்தது. ஆனால் இதில் இந்திய அணியை அறிவிப்பதற்கு மட்டும் கூடுதல் அவகாசத்தை பிசிசிஐ கோரியதாக தகவல்கள் வெளியாகியன.
இதுதவிர்த்து தற்போது வரை ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணியும், மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணியும், நஜ்ம்முல் ஹொசைன் தலைமையிலான வங்கதேச அணியும் அறிவிக்காப்பட்டுள்ளது. இந்நிலையில் இத்தொடரில் பங்கேற்கும் ஹஸ்மதுல்லா ஷாஹிதி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியாம் இன்று அறிவித்துள்ளது.