Advertisement

IND vs AUS: இந்திய பிட்ச்களுக்கு ரேட்டிங் வழங்கிய ஐசிசி?

இந்தியா - ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பிட்ச் குறித்து பெரும் சர்ச்சை எழுந்த சூழலில் இந்த விவகாரத்தில் ஐசிசி தலையிட்டுள்ளது. இந்திய களங்களுக்கு ரேட்டிங் கொடுத்துள்ளது. 

Advertisement
Sharp turning Nagpur and Delhi pitches rated average by ICC
Sharp turning Nagpur and Delhi pitches rated average by ICC (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 24, 2023 • 12:46 PM

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்துள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்தியா வெற்றி கண்டு முன்னிலை பெற்றுள்ளது. இந்த தொடர் தொடங்கியது முதல் தற்போது வரை ஆஸ்திரேலிய அணி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. அதுவும் இந்திய பிட்ச்-கள் தான் மோசமாக உள்ளது எனக்கூறி வருகின்றனர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 24, 2023 • 12:46 PM

ஆனால் ஆஸ்திரேலிய அணி கூறியதை போல இந்த முறை பிட்ச்-ல் பெரியளவில் சுழல் ஏற்படவில்லை என்பது தான் உண்மை. ஆஸ்திரேலிய அணியின் இந்த தோல்விக்கு அவர்களின் அதிகப்படியான சிந்தனைகளும், பிட்ச் எப்படி இருக்குமோ? என்ற அதிகப்படியான பயமும் தான் காரணம் என இந்திய வல்லுநர்கள் கூறி வருகின்றனர். பேட்டிங் சொதப்பல்கள் தெளிவாக தெரிந்தன.

Trending

இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து ஐசிசி நடவடிக்கை எடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், முதல் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற டெல்லி மற்றும் நாக்பூர் பிட்ச்-கள் இரண்டுமே சுமாரான களங்கள் தான் என ஐசிசி தெரிவித்திருக்கிறது. மேட்ச் நடுவரான ஜிம்பாப்வேவை சேர்ந்த ஆண்டி பைக்ராஃப்ட் கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் இந்த ரேட்டிங் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது ஐசிசியின் விதியில் என்பது பிட்ச் நேர்மையான முறையில் தான் உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் டெஸ்ட் போட்டியில் 5 நாட்களுக்கு ஏற்றார் போன்ற ஒரு பிட்ச் இல்லை எனக்கூறப்பட்டுள்ளது. இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக ஐசிசி அறிவிக்கவில்லை என்றாலும், ஆஸ்திரேலியாவின் செய்தி ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றனர். அதுவும் போட்டி நடுவரின் பரிந்துரைகளை குறிப்பிட்டு செய்தி வெளியிட்டுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி கடந்த 2017ஆம் ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போதும் இதே போன்ற பிரச்சினை எழுந்தது. அதாவது புனே பிட்ச் மிகவும் மோசமானது என போட்டி நடுவர் கிறிஸ் பிராட் அறிவித்தார். இதே போல பெங்களூரு மைதானத்தின் பிட்ச் சுமாரானது என்றுக்கூட கூற முடியாது எனக்கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement