
இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக முன்னாள் கிரிக்கெட் வீரர் கௌதம் கம்பீர் பதவியேற்றதில் இருந்து இந்திய அணியில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பேட்டர்களையும் பந்துவீச்சாளர்களாக மாற்றி வருகிறார். அந்தவகையில் நடந்து முடிந்த இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், ரோஹித் சர்மா, ரியான் பராக் என பேட்டர்கள் அனைவரும் பந்துவீச்சிலும் அசத்தினர்.
மேற்கொண்டு இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் அனைவரும் பிசிசிஐ நடத்தும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் படியும் உத்திரவிட்டுள்ளார். இதனையடுத்து இந்திய அணி வீரர்கள் துலீப் கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் நிலையில், அதிலிருந்து ஒருசில வீரர்கள் தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் பாரம்பரியமிக்க புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன.
அந்தவகையில் சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் மும்பை அணிக்காக புஜ்ஜி பாபு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகின்றன. இத்தொடரில் டிஎன்சிஏ லெவன் மற்றும் மும்பை அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறன்றன. இதில், மும்பை அணிக்காக விளையாடி வரும் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சில் ஒருசில ஓவர்களை வீசினார். இந்நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீசும் காணொளியானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Shreyas Iyer bowling with Sunil Narine action. pic.twitter.com/EpX4ZxnfZx
— Mufaddal Vohra (@mufaddal_vohra) August 27, 2024