
ENG vs IND, 1st Test: ஹெடிங்லேவில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தங்களுடைய வாய்ப்புகளை தவறவிட்டதே தோல்விக்கு காரணம் என இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
ஹெடிங்லே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன் 1-0 என்ற கணக்கில் தொடரிலும் முன்னிலையிலும் உள்ளனர். இந்நிலையில் இப்போட்டியில் தோல்வியடைந்ததற்கான காரணத்தை இந்திய அணி கேப்டன் ஷுப்மன் கில் விளக்கியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், “இது ஒரு அற்புதமான டெஸ்ட் போட்டி என்று நான் நினைக்கிறேன். எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தன, நாங்கள் கேட்சுகளை இழந்தோம், எங்கள் கீழ் வரிசை பேட்டர்கள் போதுமான பங்களிப்பை வழங்கவில்லை, ஆனால் அணியைப் பற்றி பெருமைப்படுகிறோம், ஒட்டுமொத்தமாக இது ஒரு நல்ல முயற்சி. நேற்று நாங்கள் 430 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்வோம் என்று நினைத்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்கள் கடைசி 6 விக்கெட்டுகள் 20-25 ரன்கள் மட்டுமே எடுத்தன.