Advertisement

விராட் கோலி போல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஷுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் - இர்ஃபான் பதான்!

அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலி போல் ஷுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்தார்.

Advertisement
Shubman Gill has as much potential as Virat Kohli: Irfan Pathan!
Shubman Gill has as much potential as Virat Kohli: Irfan Pathan! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Feb 03, 2023 • 12:40 PM

இந்திய கிரிக்கெட் அணியின் இளம்பேட்ஸ்மேன் ஷுப்மன் கில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் முதல் ஆட்டத்தில் இரட்டை சதமும், 3ஆவது போட்டியில் சதமும் அடித்தார்.

Bharathi Kannan
By Bharathi Kannan
February 03, 2023 • 12:40 PM

அதே போல் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் 3ஆவது மற்றும் கடைசி போட்டியில் சதம் அடித்து அசத்தினார். ரன்களை குவித்து வரும் ஷுப்மன் கில்லை பலர் பாராட்டி வருகிறார்கள்.

இந்த நிலையில் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் விராட் கோலி போல் ஷுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார் என்று இந்திய அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டர் இர்ஃபான் பதான் தெரிவித்தார்.

இதுகுறித்து பேசிய இர்ஃபான் பதான், “ஷுப்மன்கில் பேட்டிங் செய்யும் விதத்தை பார்த்து நான் அவரது ரசிகனாகி விட்டேன். அவர் அனைத்து வடிவ வீரராக உருவாக முடியும் என்று அடிக்கடி கூறி வருகிறேன். விராட் கோலி பல ஆண்டுகளாக அனைத்து வடிவங்களிலும் ஆதிக்கம் செலுத்தினார். அது போன்ற அதிக திறமை ஷுப்மன் கில்லிடம் இருக்கிறது. விராட் கோலி போல் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் ஷுப்மன் கில் ஆதிக்கம் செலுத்துவார்.

அனைத்து வடிவ போட்டியில் சுப்மன் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது காலப்போக்கில் நடக்கும். அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது முதல் சதத்தை அடித்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் மொத்தம் ஆறு சதங்களை அடித்து உள்ளார். ஷுப்மன் கில் தனது ஆட்டத்தை மேம்படுத்தி கொண்டிருக்கிறார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement