விராட் கோலியின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் ஷுப்மன் கில்!
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் ஷுப்மன் கில் சிறப்பு சாதனை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் நடைபெறும் 56ஆவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து ஷுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.
இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இப்போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் இவ்விரு அணிகளும் மோதிய முதல் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்று அசத்தியது. மேற்கொண்டு புள்ளிப்பட்டியளின் அடுத்தடுத்த இடங்களில் உள்ள அணிகள் நேருக்கு நேர் மோதவுள்ளதால் இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.
இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இப்போட்டியின் மூலம் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் டி20 கிரிக்கெட்டில் புதிய மைல் கல்லை எட்டும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்தவகையில் ஷுப்மன் கில் இப்போட்டியில் 64 ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில் டி20 கிரிக்கெட்டில் தனது 5000 ரன்களை அவர் பூர்த்தி செய்வார். இதன்மூலம் டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய எனும் பெருமையையும் பெறவுள்ளார்.
முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் எனும் சாதனையை படைத்துள்ளர். அவர் 167 இன்னிங்ஸில் 5ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக உள்ளது. அதேசமயம் ஷுப்மன் கில் 155 போட்டிகளில் 152 இன்னிங்ஸ்களில் 4936 ரன்கள் எடுத்துள்ளார். இந்த பட்டியலில் கேஎல் ரகுல் 143 இன்னிங்ஸ்களில் 5ஆயிரம் ரன்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.
டி20 கிரிக்கெட்டில் அதிவேகமாக 5000 ரன்களை அடித்த இந்திய வீரர்கள்
- கே.எல். ராகுல் - 143 இன்னிங்ஸ்
- விராட் கோலி - 167 இன்னிங்ஸ்கள்
- சுரேஷ் ரெய்னா - 173 இன்னிங்ஸ்
மும்பை இந்தியன்ஸ் உத்தேச லெவன்: ரியான் ரிக்கல்டன், ரோஹித் சர்மா, வில் ஜாக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), நமன் தீர், கார்பின் போஷ், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், ஜஸ்பிரித் பும்ரா.
Also Read: LIVE Cricket Score
குஜராத் டைட்டன்ஸ் உத்தேச லெவன்: சாய் சுதர்ஷன், ஷுப்மன் கில் (கேப்டன்), ஜோஸ் பட்லர், வாஷிங்டன் சுந்தர், ராகுல் திவேத்தியா, ஷாருக் கான், ரஷித் கான், சாய் கிஷோர், ஜெரால்டு கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா
Win Big, Make Your Cricket Tales Now