
Sri Lanka vs Bangladesh: இலங்கைக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் வங்கதேச அணி விளையாடி வரும் நிலையில், இரண்டாவது போட்டியில் நட்சத்திர ஆல் ரவுண்ட்ர் மெஹிதி ஹசன் மிராஸ் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேச அணியானது தற்சமயம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கலே கிரிக்கெட் மைதனத்தில் நடைபெற்று வரும் இரு அணிகளுக்கும்ம் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ்லில் வங்கதேச அணி 495 ரன்களையும், இலங்கை அணி 485 ரன்களையும் சேர்த்துள்ளன. இதையடுத்து 10 ரன்கள் முன்னிலையுடன் வங்கதேச அணி இரண்டாம் இன்னிங்ஸைத் தொடர்ந்து வருகிறது.
இதனையடுத்து இலங்கை - வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் ஜூன் 25ஆம் தேதி கொழும்புவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டிக்கு முன்னதாக வங்கதேச அணிக்கு நல்ல செய்தி வந்துள்ளது. அதன்படி காய்ச்சல் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் பங்கேற்காத வங்கதேச அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டர் மெஹிதி ஹசன் மிராஸ் தற்சமயம் குணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.