
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி வருகின்றன. நடைபெற்று முடிந்த இந்த மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முடிவில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் அபாரமான வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியதுடன் இலங்கை அணியை அதன் சொந்த மண்ணிலேயே ஒயிட்வாஷ் செய்தும் அசத்தியுள்ளது.
இதனையடுத்து இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது வரும் ஆகஸ்ட் 02ஆம் தேதி முதல் கொழும்புவில் தொடங்கவுள்ளது. இத்தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலி, கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இலங்கை சென்றுள்ள இந்திய வீரர்கள் தங்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், குல்தீப் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டனர். அதன்படி அவர்கள் பயிற்சி மேற்கொள்ளும் புகைப்படங்களையும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி தங்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இதையடுத்து இப்புகைப்படங்களானது இணையத்தில் வைரலாகி வருகிறது.
The big guns are back for the ODI leg of India's tour of Sri Lanka #SLvIND | : @BCCI pic.twitter.com/GRmPPDCt15
— ICC (@ICC) July 31, 2024