
EN-W vs IN-W, 3rd ODI: மூத்த வீராங்கனைகள் ரேணுகா சிங், பூஜா வஸ்திரகர் ஆகியோர் இல்லாத நிலையில், இளம் வீராங்கனைகள் ஸ்ரீ சரணி மற்றும் கிராந்தி கவுட் ஆகியோர் சிறப்பாக செயல்படுவதாக ஸ்னே ராணா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இந்திய மகளிர் அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த முதலிரண்டு போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து தொடரை சமன்செய்துள்ளது. இந்நிலையில் இங்கிலாந்து மற்றும் இந்திய மகளிர் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடrரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை செஸ்ட்ர் லீ ஸ்டீரிட்டில் நடைபெறவுள்ளது.
இதில் ஏற்கெனவே இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்த உத்வேகாத்துடன் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதனல் இந்த போட்டியில் எந்த அணி வெற்றிபெற்று தொடரை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீராங்கனைகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் இளம் வீராங்கனைகள் சிறப்பாக செயல்படுவதாக ஸ்நே ரானா கூறியுள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.