
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை நாக்பூரில் தொடங்குகிறது.
இந்நிலையில் இத்தொடர் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேட்டியளித்துள்ளார். அப்போது கங்குலியிடம் இந்திய அணி ஏதேனும் ஒன்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றால் நீங்கள் என்ன சொல்வீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்குலி, “இந்திய அணி வீரர்கள் பேட்டிங்கில் சரியாக விளையாட வேண்டும். ஆடுகளம் நன்றாக இருக்கும் என்று நான் எங்கேயோ படித்தேன்.
ஒரு நல்ல விக்கெட் என்றால் பந்து மூன்றாவது நாளில் தான் திரும்பும். அப்போதுதான் பேட்டிங் செய்ய மிகவும் கஷ்டமாக இருக்கும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக சதங்களை நமது வீரர்கள் அடிப்பதில்லை. அதுக்கு காரணம் ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால் தான். ஆனால் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இம்முறை இருப்பதால் நான் இந்த தொடரை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன்.