கங்குலி, டிராவிட்டை சாடும் விருத்திமான் சஹா!
இந்திய டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான விருத்திமான் சகா ராகுல் டிராவிட் மற்றும் கங்குலி மீது கடுமையான விமர்சனத்தை சுமத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா. டெஸ்ட் அணியில் மட்டுமே விளையாடி வருகிறார். இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.
அணியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் கங்குலி ஆகியோரை விருத்திமான் சஹா கடுமையாக சாடியுள்ளார்.
Trending
இது தொடர்பாக பேசிய அவர், “என்னை ஓய்வு குறித்து பரிசீலிக்குமாறு ராகுல் டிராவிட் சொன்னார். இந்திய அணிக்கு மீண்டும் நான் தேர்வு செய்யப்பட மாட்டேன் என்பதால் ஓய்வு பெறுமாறு அணி நிர்வாகம் பரிசீலிக்க சொன்னது.
கடந்த நவம்பர் மாதம் கான்பூரில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் நான் வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொண்டு ஆட்டம் இழக்காமல் 61 ரன் எடுத்தேன். அப்போது கங்குலி வாட்ஸ்அப் மூலம் என்னை பாராட்டினார்.
கிரிக்கெட் வாரிய தலைவராக இருக்கும் வரை எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று கங்குலி என்னிடம் வாக்குறுதி அளித்தார். அவரது தைரியம் என் நம்பிக்கையை அதிகரித்தது. ஆனால் தற்போது அவசரமாக நான் நீக்கப்பட்டது ஏன் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை” என்று தெரிவித்துள்ளார்.
Win Big, Make Your Cricket Tales Now