
இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடின. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் சமநிலையில் இருந்த நிலையில், இரு அணிகள் இடையேயான ஒருநாள் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 269 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 47 ரன்களும், அலெக்ஸ் கேரி 38 ரன்களும் எடுத்தனர். இதன்பின் சற்று கடின இலக்கை துரத்தி களமிறங்கிய இந்திய அணி 49.1 ஓவரில் 248 ரன்கள் எடுத்த போது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இதன்மூலம் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி அசத்தியது. இந்தநிலையில், இந்திய அணியுடனான இந்த வெற்றி குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் கேப்டனான ஸ்டீவ் ஸ்மித், இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி அவ்வளவு சிறப்பாக விளையாடவில்லை என தெரிவித்துள்ளார்.