
இன்னும் சில தினங்களில் இந்தியா, ஆஸ்திரேலியா பங்கேற்கும் 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் தொடங்கி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 9-13, 17-21 மற்றும் மார்ச் 1-5, 9-13 ஆகிய தேதிகளில் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இத்தொடரில் இந்திய அணி 3-0 அல்லது 3-1 என்ற கணக்கில் வென்றாக வேண்டும். கடந்த இரண்டுமுறை ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி டெஸ்ட் தொடரைக் கைப்பற்றியதால், இம்முறை இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி கடுமையாக போராடும் எனக் கருதப்படுகிறது.
இந்திய மண்ணில் சுழற்பந்து வீச்சாளர்களால்தான் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும். குறிப்பாக, ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்கு கடும் சவாலாக இருப்பார் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அஸ்வினைப் போலவே, பந்துவீசும் ஒருவரை வைத்து பயிற்சியில் ஈடுபட ஸ்மித் முடிவு செய்தார்.