
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்துவரும் ஆஸ்திரேலிய அணி 4 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்திய 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்றதுடன், கோப்பையை மீண்டும் தன்வசமாக்கியது.
இதற்கிடையில், தனது தாயாருக்கு உடல்நிலை சரியில்லாததால் ஆஸ்திரேலியாவுக்குத் திரும்பினார் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ். இதனால் 3ஆவது டெஸ்டில் அவர் விளையாடவில்லை. ஸ்டீவ் ஸ்மித் கேப்டன் பொறுப்பை ஏற்று அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.
அதன்பின் பாட் கம்மின்ஸின் தாயர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்த காரணத்தால் அவர் நான்காவது டெஸ்ட் போட்டியிலிருந்தும் விலகினார். இதன் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியை வழிநத்தினர். இதையடுத்து நடைபெறவுள்ள இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி விளையாடவுள்ளது.