-mdl.jpg)
Stokes, Root, Bairstow return for ODIs against India; uncapped Gleeson earns England T20I call-up (Image Source: Google)
இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது இந்திய அணி.
டெஸ்ட் போட்டி இன்று எட்ஜ்பாஸ்டனில் தொடங்குகிறது. இந்த போட்டி முடிந்ததும், ஜூலை 7, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டி20 போட்டிகளும், ஜூலை 12, 14, 17 ஆகிய தேதிகளில் ஒருநாள் போட்டிகளும் நடக்கவுள்ளன.
ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்ட் போட்டியில் கரோனா காரணமாக ரோஹித் சர்மா ஆடவில்லை. அதனால் பும்ரா கேப்டனாக செயல்படவுள்ளார். ஆனால் டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக செயல்படுகிறார்.