Advertisement

ஷுப்மன் கில் இனி வரும் காலங்களில் சிறப்பாக செயல்படுவார்- சுனில் கவாஸ்கர்!

ஷுப்மன் கில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக விளையாடக் காரணம் இதுதான் என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Advertisement
Sunil Gavaskar makes big prediction about Shubman Gill's future!
Sunil Gavaskar makes big prediction about Shubman Gill's future! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 11, 2023 • 04:24 PM

பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் நான்காவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது. ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 480-ன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பிறகு பேட்டிங் செய்து வரும் இந்திய அணிக்கு துவக்க வீரர் ஷுப்மன் கில் மற்றும் ரோகித் சர்மா இருவரும் சிறப்பாக துவங்கினர்.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 11, 2023 • 04:24 PM

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. அதிரடியாக விளையாடி வந்த ரோகித் சர்மா துரதிஷ்டவசமாக 35 ரன்களில் ஆட்டம் இழந்தார். மறுமுனையில் நிதானமாக விளையாடி வந்தார் ஷுப்மன் கில். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இவரை பிளேயிங் லெவனில் கொண்டு வந்தது ஏமாற்றம் அளித்தது. 21, 5 ரன்கள் என இரண்டு இன்னிங்சிலும் சொற்பரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ஆனால் நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் விமர்சனங்கள் அனைத்திற்கும் பதில் கொடுக்கும் விதமாக டெஸ்ட் அரங்கில் தனது இரண்டாவது சதத்தை அடித்திருக்கிறார் கில்.

Trending

இந்த ஆண்டு கில்லுக்கு மிகவும் சிறப்பாகவே அமைந்தது. ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் மற்றும் ஒரு இரட்டை சதம் விலாசினார். டி20 போட்டியில் தனது முதல் சதத்தையும் அடித்தார். தற்போது டெஸ்ட் தொடரிலும் சதம் அடித்திருக்கிறார். ஒரே ஆண்டில் மூன்று வித போட்டிகளிலும் சதம் அடித்த வெகு சில வீரர்களில் கில்லும் ஒருவர் ஆவார். அபாரமான பேட்டிங் மூலம் இப்படி பல சாதனைகளை படைத்து வரும் ஷுப்மன் கில் ஒவ்வொரு போட்டிகளிலும் சிறப்பாக செயல்படுவதற்கு காரணம் இதுதான் என்று ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் குறிப்பிட்டு பேசியுள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “ஒரு சில சிறந்த வீரர்கள் அனைத்துவித போட்டிகளுக்கும் ஒரே மாதிரியான அணுகுமுறையை கையாள்வார்கள். ஆனால் ஷுப்மன் கில் வெவ்வேறு விதமாக கையாள்கிறார். டெஸ்ட் போட்டியில் இவர் தடுத்து விளையாடும் ஆட்டம் நேர்த்தியாக இருக்கிறது. சிலர் பேட்டை வேறு பக்கமாக திருப்பி விடுவார்கள். ஆனால் கில் பேட்டை கடைசி வரை நேராக வைத்து விளையாடுகிறார். அதுதான் டெஸ்டுக்கு மட்டுமல்லாது, அனைத்து போட்டிகளுக்கும் முதல் முக்கியம்.

அதேபோல் எல்லா பந்தையும் காலை பின்னே வைத்து விளையாட முயற்சிக்கக் கூடாது. அதிக அளவில் முன்னோக்கி விளையாட வேண்டும். அதையும் கில் மிகவும் சரியாக செய்கிறார். இதனால் ஒரு நாள் போட்டிகள், டெஸ்ட் போட்டிகள் என அனைத்திலும் இவரால் நன்றாக செயல்பட முடிகிறது. இனிவரும் காலங்களிலும் இன்னும் சிறப்பாக விளையாடுவார்” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement