
ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரானது நெருங்கிவரும் சூழலில் அத்தொடரின் மீதானா எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெறும் இத்தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்கவுள்ள நிலையில், இதில் எந்த கோப்பையை வென்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒவ்வொரு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்கும் அணிகளை அந்நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் அறிவித்து வருகின்றன. அதன்படி நடப்பு டி20 உலகக்கோப்பை தொடரில் விளையாடும் மிட்செல் மார்ஷ் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜேக் ஃபிரேசர் மெக்குர்க் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் இடம்பிடிக்கவில்லை.
Steve Smith and Jake Fraser-McGurk missed out on the World Cup squad! #CricketTwitter #Australia #StevenSmith #JakeFraserMcgurk pic.twitter.com/y1F0rm9TOZ
— CRICKETNMORE (@cricketnmore) May 1, 2024