
டி20 உலககோப்பையில் இந்தியா எந்த 5 அணிகளை எதிர்கொள்ள போகிறது என்ற பட்டியல் பல அதிரடி திருப்பங்களுடன் முடிவுக்கு வந்திருக்கிறது. ஏற்கனவே குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, வங்கதேச அணிகளை எதிர்கொள்ளப்போவது உறுதியான நிலையில் மீதமுள்ள 2 அணிகள் எது என்பதும் உறுதியாகியுள்ளது.
டி20 உலககோப்பை போட்டிகள் குரூப் ஸ்டேஜ் பிரிவு, சூப்பர் 12 பிரிவு என இரண்டு பிரிவுகளாய் பிரிக்கப்பட்டு அதில் மொத்தம் 42 போட்டிகள் நடத்தப்பட்டு அதில் சிறப்பாக செயல்பட்டு வெற்றியைபெறும் அணிகள் அடுத்தடுத்த சுற்றுக்கு முன்னேறி அரையிறுதிக்குள் நுழையும் என்று அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் குரூப் ஸ்டேஜ் சுற்று போட்டிகள் தொடங்கப்பட்டு தற்போது முடிவை எட்டியுள்ளன. பல அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சியளித்து அபார வெற்றியை பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு சென்றுள்ளன. 2022 டி20 உலககோப்பையில் முதல் ஹாட் டிரிக் விக்கெட்டுகள், அபாரமான கேட்ச்கள், அரைசதங்கள் என சுவாரசியத்திற்கு குறைவில்லாமல் குரூப் சுற்று போட்டிகள் முடிவுக்கு வந்துள்ளன. 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி சுப்பர் 12 அணிகள் பட்டியல் முடிவுக்கு வந்துள்ளது.