
அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரானது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றிபெற்றதுடன், சூப்பர் 8 சுற்றுக்கும் முன்னேறி அசத்தியுள்ளது. இருப்பினும் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களின் செயல்பாடுகள் பெரிதளவில் சோபிக்க தவாறி வருவது பெரும் விமசனங்களை ஏற்படுத்தி வருகிறது.
அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ரன் மெஷின் என்றழைக்கப்படும் விராட் கோலி முதலிரண்டு போட்டிகளில் ஒரு சில ரன்களையாவது செர்த்த நிலையில், அமெரிக்க அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில் எதிர்கொண்ட முதல் பந்திலேயே விக்கெட்டை இழந்து ஏமாற்றமளித்தார். அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவும் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்த தவறி வருகிறார்.
மேற்கொண்டு கடந்த இரண்டு போட்டிகளிலும் சொதப்பிய சூர்யகுமார் யாதவ் மற்றும் ஷிவம் தூபே ஆகியோர் அமெரிக்க அணியுடன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தனர். இருப்பினும் அவர்களது செயல்பாடுகளும் சொல்லிக்கொள்ளும் அளவில் இல்லை என்பதால் இந்திய அணியின் பேட்டிங் மீதான விமர்சனங்களும் அதிகரித்து வருகின்றனர்.