
ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை தொடரில் நாளை நடைபெறும் லீக் ஆட்டத்தில் குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே ரசிகர்களிடம் அதிக உற்சாகம் இருக்கும். அதிலும் டி20 உலகக் கோப்பைத் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள இந்திய அணியும், அமெரிக்காவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த பாகிஸ்தான் அணியும் மோதுவதால் இப்போட்டியில் எந்த அணி வெற்றிபெறும் என்ற ரசிகர்களின் எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடுவது எப்போதும் சவால் நிறைந்ததாகவே இருக்கும் என்று இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் பாகிஸ்தானுடன் விளையாடும்போது, அது எப்போதும் சவாலானதாக இருக்கும். எங்களைப் பொறுத்தவரை, நாம் அவர்களை வீழ்த்தி அவர்களுக்கு எதிராக நன்றாக விளையாட வேண்டும் என்பதை மற்றொரு எதிரணியாக மட்டுமே நினைத்துப் பார்க்க வேண்டும். அதனால் இப்போட்டியில் நாம் செய்ய வேண்டியது நிறைய உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசிய இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி, “உலகக் கோப்பை போன்ற ஒரு தொடரில் நீங்கள் விளையாடும் போது ஒரு வித்தியாசமான உணர்ச்சியை நீங்கள் உணர முடியும். ஏனெனில் இத்தொடரின் போது எல்லா அணிகளும் சவாலை கொடுப்பார்கள் என்பதால் உங்களது பதற்றம் அதிகரிக்கும். நான் அந்த தருணங்களை விரும்புகிறேன், அத்தகைய தருணங்களுக்காக நாங்கள் விளையாடுகிறோம். அதை அனுபவிப்பது என்பது எங்களுக்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம் என்று தன் நினைக்கிறேன்.