
ஐசிசி தரவரிசை பட்டியலில் மீண்டும் ஒரு குழப்பத்தை இந்திய ரசிகர்கள் சந்தித்துள்ளனர். மதிய நேர நிலவரப்படி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி 115 புள்ளிகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. ஆஸ்திரேலியா அணி 111 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்ததாகவும் ஐசிசியின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை நம்பி பல்வேறு ரசிகர்களும் மகிழ்ச்சியை கொண்டாடினர். காரணம் இந்திய அணி முதல்முறையாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்திலும் முதல் இடத்தை ஒரே தருணத்தில் பிடித்தது.
இந்த நிலையில் மகிழ்ச்சியில் இருந்த ரசிகர்களுக்கு அந்த அதிர்ச்சி செய்தி வந்தது.அதாவது ஐசிசி தளத்தில் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக இவ்வாறு தவறுதலாக பதியப்பட்டிருந்ததாகவும், உண்மையில் ஆஸ்திரேலியா அணி தான் 126 புள்ளிகள் உடன் முதலிடத்திலும், இந்திய அணி 115 புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்திலும் இருப்பதாக மாற்றி அமைக்கப்பட்டது.