
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜூலை 31ஆம் தேதி லண்டனில் உள்ள கெனிங்ஸ்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய அணி வெற்றி பெற்றால் மட்டுமே டெஸ்ட் தொடரை சமன்செய்ய முடியும் என்ற நிலையில் இப்போட்டியை எதிர்கொள்கிறது. இதற்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இப்போட்டிக்கான இந்திய அணி நேற்றைய தினம் லண்டன் சென்றடைந்துள்ளது. அதைத்தொடர்ந்து வீரர்கள் இன்று மற்றும் நாளை பயிற்சி அமர்வுகளில் ஈடுபடுவார்கள் என்றும் கூறப்படுகிறது. முன்னதாக லண்டன் சென்றடைந்த இந்திய அணி வீரர்களுக்கு லண்டனில் உள்ள இந்திய தூரகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் இந்திய அணி வீரர்கள், பயிற்சியாளர்கள், குழு உறுப்பினர்கள் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிகழ்வின் போது இந்திய அணி கேப்டன் ஷுப்மான் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் ஆகியோர் தங்கள் கையொப்பமிட்ட கிரிக்கெட் பேட்டை இந்திய கௌரவ தூதர் திரு. விக்ரம் துரைசாமி மற்றும் துணை தூதர் திரு. சுஜித் கோஷ் ஆகியோருக்கு வழங்கினர். அப்போது பேசிய தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர், “இங்கிலாந்து சுற்றுப்பயணம் எப்போதும் உற்சாகமாகவும் சவாலாகவும் இருந்தது. இரு நாடுகளுக்கும் இடையிலான வரலாற்றை ஒருபோதும் மறக்க முடியாது.