
அமெரிக்காவில் நடைபெற்றுவரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற 12ஆவது லீக் போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த சூப்பர் கிங்ஸ் அணிக்கு டெவான் கான்வே - கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் இணை தொடக்கம் கொடுத்தனர். இருவரும் இணைந்து ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஸ்கோரும் மளமளவென் உயர்ந்தது. இதன் மூலம் இருவரும் இணைந்து முதல் விக்கெட்டிற்கு 85 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அசத்தினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஃபாஃப் டூ பிளெசிஸ் தனது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். பின்னர் 4 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 61 ரன்கள் சேர்த்த நிலையில் பாஃப் டூ பிளெசிஸ் விக்கெட்டை இழக்க, அவரைத்தொடர்ந்து அரைசதத்தை நெருங்கிய டெவான் கான்வேவும் 40 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய ஆரோன் ஹார்டி 22 ரன்களுக்கும், ஜோஷுவா ட்ரோம் 3 ரன்களிலும், மிலிந்த் குமார் 2 ரன்களிலும், சவேஜ் 10 ரன்களிலும் என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியனுக்கு நடையைக் கட்டி ஏமாற்றமளித்தனர்.
இருப்பினும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஆரோன் ஹார்டி 22 ரன்களைச் சேர்த்தார். இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியானது 6 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்களைச் சேர்த்தது. நியூயார்க் அணி தரப்பில் டிரெண்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய நியூயார்க் அணியிலும் எதிர்பார்த்த தொடக்கம் கிடைக்கவில்லை. அதன்படி அந்த அணியின் டாப் ஆர்டர் வீர்ர்கள் ருபேன் கிளிண்டன் 7 ரன்களுக்கும், அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் ஒரு ரன்னிலும், ஸ்டீவன் டெய்லர் 8 ரன்களிலும் என விக்கெட்டை இழந்தனர்.