
நடப்பு ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதவுள்ளன. அஹ்மதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ள போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். இந்த உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் வென்று இந்திய அணி ஒரு தோல்வி கூட இல்லாமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் மூவரும் 500 ரன்களுக்கு மேல் விளாசி சாதனை படைத்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் முகமது ஷமி, பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் உள்ளிட்ட 4 பவிலர்களும் 15 விக்கெட்டுகளுக்கு மேல் அசத்தியுள்ளனர். இதனால் இந்திய அணியே கோப்பையை வெல்லும் என்று ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
இதனிடையே இதுவரை உலகக்கோப்பை தொடரில் விளையாடிய இந்திய அணியிலேயே, இப்போதைய அணிதான் வலிமையானது என்று ரசிகர்களிடையே விவாதம் எழுந்துள்ளது. இந்த அணியுடன் ஒப்பிட்டால் 2011ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியின் வலிமை குறைந்தது என்றும், 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற அணியினரின் பலம் இன்னும் குறைந்தது என்றும் ரசிகர்களிடையே கருத்து நிலவி வருகிறது.