
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அதன்பின் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. இதற்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தில் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்காக விளையாடிய சீனியர் வீரர்கள் அணிக்கு திரும்பியுள்ளனர். அதேபோல் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் துணை கேப்டனாக செயல்பட்ட அஜிங்கியா ரஹானே தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அதேபோல் பேக் அப் விக்கெட் கீப்பரான கேஎஸ் பரத் நீக்கப்பட்டுள்ளார். மேலும் துணை கேப்டனாக பும்ரா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ளனர். ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்படாத ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டெஸ்ட் தொடரில் மட்டுமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.