
தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரானது தற்சமயம் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இதுவரை இரண்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இரண்டு போட்டியிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்று அசத்தியதுடன் 2-0 என்ற கணக்கில் டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தியுள்ளது.
இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று (டிசம்பர் 14) ஜோஹன்னஸ்பர்க்கில் உள்ள வாண்டரர்ஸ் மைதானத்தில் நடைபெற இருந்தது. இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு இப்போட்டி தொடங்க இருந்த நிலையில் மழை மற்றும் மின்னல் காரணமாக போட்டியின் டாஸ் நிகழ்வானது தாமதமானது.
பின் மழை தொடர்ந்து நீடித்த காரணத்தால் இப்போட்டியானது டாஸ் கூட வீசப்படாமல் முழுவதுமாக கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றதன் காரணமாக, 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி தொடரை வென்றதாக அறிவிக்கப்பட்டு கோப்பையும் வழங்கப்பட்டது.