விராட் கோலிக்கும் ரோஹித்துக்கு எந்த மோதலும் இல்லை - சேத்தன் ஷர்மா!
விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டதில் ரோஹித் சர்மாவின் பங்கு என்ன என்பது குறித்து தற்போது சேத்தன் ஷர்மாவின் காணொளியால் தகவல் வெளியாகி உள்ளது.
விராட் கோலி தலைமையில் இந்திய அணி எந்த ஒரு ஐசிசி சாம்பியன் கோப்பையையும் வெல்லவில்லை. இதனால் பிசிசிஐ நிர்வாகிகள், கோலியை கேப்டன் பதவியை விட்டு நீக்க முடிவு எடுத்த நிலையில், விராட் கோலி டி20 கேப்டனாக தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் டெஸ்ட், ஒருநாள் என இரண்டு கேப்டன்கள் இருக்க முடியாது என்று கூறி, விராட் கோலியை பிசிசிஐ ஒருநாள் போட்டியிலிருந்து அதிரடியாக நீக்கியது.
இந்த விவகாரத்தில் ரோஹித் சர்மாவுக்கும் பங்கு உண்டு என்று விமர்சனம் எழுந்தது. இதன் காரணமாக, கோலிக்கும், ரோஹித்துக்கும் இடையே விரிசல் ஏற்பட்டதாக அந்த சமயத்தில் செய்திகள் வெளியாகின. இதனால் தென் ஆப்பிரிக்க தொடரில் ரோஹித் சர்மா பங்கேற்கவில்லை என்றும் கூறப்பட்டது.
Trending
இந்த நிலையில் சேத்தன் சர்மாவின் ரகசிய காணொளியில், இது அனைத்தம் பொய் என்று தெரியவந்துள்ளது. விராட் கோலி கடந்த மூன்று ஆண்டுகளாக ஃபார்மில் இல்லாத போது ரோஹித் சர்மா தான் அவருக்கு ஆதரவு கெடுத்து பேசியதாக சேத்தன் சர்மா தெரிவித்துள்ளார்.
மேலும் விராட் கோலிக்கும், ரோஹித் சர்மாவுக்கும் இடையே எந்த போட்டியும், விரிசலும் இல்லை என்றும், ஒருவருக்கு ஒருவர் ஆதரவு கொடுத்து வந்ததாக சேத்தன் ஷர்மா தெரிவித்துள்ளார். மேலும் கோலியும், ரோஹித்தும் அமிதாப் மற்றும் தர்மேந்திரா போல் இருந்ததாகவும் சேத்தன் ஷர்மா பாராட்டியுள்ளார். இதன் மூலம் விராட் கோலியின் கேப்டன் பதவியின் மீது ரோஹித் சர்மா ஆசைப்படவில்லை என்று தெளிவாகி விட்டது.
Win Big, Make Your Cricket Tales Now