இந்திய அணி எப்போதும் கடுமையாகப் போராடுவார்கள் - பென் ஸ்டோக்ஸ்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற முயற்சிப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.

Anderson-Tendulkar Trophy: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற முயற்சிப்போம் என இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி பர்மிங்ஹாமில் உள்ள எட்ஜ்பாஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறவுள்ளது. இதனால் இப்போட்டியிலும் அந்த அணி வெற்றிபெற்று தொடரில் முன்னிலையை தக்கவைக்கும் முனைப்பில் இங்கிலாந்து அணி விளையாடவுள்ளது. மறுபக்கம் இந்திய அணி முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் இப்போட்டிக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய இங்கிலாந்து அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ், “இந்தியா ஒரு நல்ல அணி. அவர்கள் எப்போதும் கடுமையாகப் போராடுவார்கள், கடுமையாகத் திரும்பி வருவார்கள் என்று நினைக்கிறேன். சர்வதேச விளையாட்டு வீரர்களின் தோள்களில் எப்போதும் அழுத்தம் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்று நான் நினைக்கிறேன். ஆனால் இந்தியாவுக்காக விளையாடும் நிச்சயமாக மற்ற அணிகளை காட்டிலும் சற்று அதிகமாக இருக்கலாம்.
ஆனால் கடந்த வாரத்தில் இருந்து எதையும் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்வதில்லை. நாங்கள் ஹெடிங்லேவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். அதனால் இங்கும் நாங்கள் சிறப்பாக செயல்படுவதுடன் 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை பெற நாங்கள் முயற்சிப்போம்” என்று கூறியுள்ளார். இதனால் இப்போட்டியில் இங்கிலாந்து அணியின் செயல்பாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முன்னதாக இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஜோஃப்ரா ஆர்ச்சருக்கு இடம் கிடைக்கவில்லை. கடந்த 2021ஆம் ஆண்டிற்கு பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பிய ஜோஃப்ரா ஆர்ச்சர் இப்போட்டியில் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவருக்கு இந்த போட்டியில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இதனால் முந்தைய போட்டியில் விளையாடிய வீரர்களே இப்போட்டியிலும் இடம்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
இங்கிலாந்து பிளேயிங் லெவன்: ஜாக் கிரௌலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயிப் பஷீர்
Win Big, Make Your Cricket Tales Now