ஐபிஎல் 2025: எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகிய ஆர்ச்சர், ஜேமி ஸ்மித், சாம் கரண்!
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆல் ரவுண்டர்கள் சாம் கரன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் ஐபிஎல் தொடரின் எஞ்சியா போட்டிகளில் இருந்து விலகிவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் தொடரின் 18ஆவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையேயான போர் பதற்றம் காரணமாக இத்தொடரில் எஞ்சியிருந்த போட்டிகளை ஒருவாரம் ஒத்திவைப்பதாக பிசிசிஐ அறிவித்திருந்தது.
இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் நிறுத்தத்தை அறிவித்ததை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் எஞ்சிய போட்டிகள் எதிவரும் மே 17ஆம் தேதி முதல் தொடங்கும் என்று பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. அதன்படி மே 17ஆம் தேதி தொடங்கும் இத்தொடரின் லீக் சுற்று போட்டிகள் மே 27ஆம் தேதி வரையில், மே 29ஆம் தேதி முதல் பிளே ஆஃப் போட்டிகளும், ஜூன் 03அம் தேதி இறுதிப்போட்டியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் இத்தொடரின் எஞ்சிய லீக் போட்டிகள் அனைத்தும் பெங்களூரு, டெல்லி, லக்னோ, அஹ்மதாபாத், மும்பை மற்றும் ஜெய்ப்பூரில் மட்டுமே நடைபெறும் என்றும், பிளே ஆஃப் சுற்றுக்கான மைதானங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் பிசிசிஐ தரப்பில் கூறப்பட்டிருந்தது. இதனையடுத்து அனைத்து ஐபிஎல் அணிகளும் எஞ்சிய போட்டிகளுக்கான தங்களுடைய தயாரிப்புகளில் இறங்கிவுள்ளன.
இந்நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சாம் கரன், ஜேமி ஓவர்டன் ஆகியோர் ஐபிஎல் தொடரின் எஞ்சியா போட்டிகளில் இருந்து விலகிவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர், லியாம் லிவிங்ஸ்டோன் மற்றும் வில் ஜேக்ஸ் ஆகியோர் ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ளனர்.
Also Read: LIVE Cricket Score
அதேசமயம் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயத்தால் அவதிப்படுவதால் அவர் மீண்டும் அணியில் இடம் பெறவில்லை என்று ராஜஸ்தான் ராயல்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது. மீதமுள்ள போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், வீரரின் உடற்தகுதியில் கவனம் செலுத்துவதாக அந்த அணி தெரிவித்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கரன் மற்றும் ஓவர்டன் இனி அணியில் சேர மாட்டார்கள் என்பதையும், அவர்களுக்குப் பதிலாக புதிய வீரர்கள் யாரும் அழைக்கப்பட மாட்டார்கள் என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
Win Big, Make Your Cricket Tales Now