கிரிக்கெட்டில் இன்றைய டாப் 5 முக்கிய செய்திகள்!
இன்றைய தினம் கிரிக்கெட் அரங்கில் நடந்த டாப் 5 முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த பதிவில் பர்ப்போம்.

இன்றைய டாப் 5 கிரிக்கெட் செய்திகள்: ஆகஸ்ட் 17, 2025 அன்று கிரிக்கெட் அரங்கில் நடைபெற்ற சில் முக்கிய நிகழ்வுகளை அறிந்துகொள்ள சிறந்த 5 கிரிக்கெட் செய்திகளை இப்பதிவில் பார்ப்போம்.
1. கரீபியன் பிரீமியர் லீக் தொடரின் நடப்பு சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று நடைபெற்ற லீக் போட்டியில் பார்படாஸ் ராயல்ஸை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி செயின்ட் கிட்ஸ் அண்ட் நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராயல்ஸ் அணி 152 ரன்களை இலக்காக நிர்ணயித்த நிலையில், பேட்ரியாட்ஸ் அணி 19.4 ஓவர்களில் இலக்கை எட்டி வெற்றி பெற்றது.
2. ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த அணியில் ஃபகர் ஸமான், ஷாஹீன் அஃப்ரிடி, இஃப்திகார் அஹ்மத், ஹாரிஸ் ராவுஃப் உள்ளிட்டோருக்கும் இடம் கிடைத்துள்ள நிலையில், நட்சத்திர வீரர்கள் பாபர் ஆசாம் மற்றும் முகமது ரிஸ்வான் அகியோருக்கு வாய்ப்பு வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
3. 2025 டி20 ஆசிய கோப்பைக்கான இந்திய அணியின் விளையாடும் அணியையும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் தேர்வு செய்துள்ளார். இந்த அணியில், தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் அதிரடியான பினிஷர் ரிங்கு சிங்கிற்கு ஆகியோருக்கு இடம் கொடுக்காத நிலையில், சுப்மன் கில், ஷிவம் தூபே மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகியோரை அணியில் சேர்த்துள்ளார்.
4. இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் சரியான தேர்வாக இருப்பார் என்று சட்டேஷ்வர் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். கடந்தாண்டு பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து அஸ்வின் ஓய்வை அறிவித்த நிலையில், தற்சமயம் அவர் ஐபிஎல் மற்றும் உள்ளூர் டி20 தொடர்களில் மட்டும் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read: LIVE Cricket Score
5. இந்திய மகளிர் ஏ அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் ஏ அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது. இருப்பினும் இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளதன் காரணமாக 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now