
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகளை கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது பெர்த்தில் உள்ள ஆப்டஸ் கிரிக்கெட் மைதானத்தில் எதிவரும் நவம்பர் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக நியமிக்காப்பட்ட ரோஹித் சர்மா தனது இரண்டாவது குழந்தை பிறப்பு காரணமாக இந்திய அணியுடன் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கு செல்லவில்லை. மேலும் அவர் இன்னும் சில தினங்கள் தாது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிட முடிவுசெய்ததன் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினார். இதன் காரணமாக இந்திய அணியை ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார்.
இந்நிலையில் குழந்தை பிறப்பின் காரணமாக டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிய இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் முடிவை நான் 100 சத வீதம் ஆதரிக்கிறேன் என்று ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் டிராவிஸ் ஹெட் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "“கிரிக்கட் வீரர்களாகிய நாங்கள் பல விஷயங்களை தியாகம் செய்கிறோம், அதனால் நாங்கள் எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் பல சிறப்பு தருணங்களை இழக்கிறோம்.