
Trinbago Knight Riders: டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பாவான் மற்றும் அந்த அணியின் முன்னாள் கேப்டன் டுவைன் பிராவோ நியமிக்கப்படுள்ளார்.
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரை பின் பற்றி உலகெங்கிலும் பல்வேறு நாட்டு கிரிக்கெட் வாரியங்களும் தங்களுக்கென தனி டி20 பிரீமியர் லீக்குகளை தொடங்கி நடத்தி வருகின்றன. அந்தவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியமும் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கரீபியன் பிரீமியர் லீக் எனும் டி20 தொடரை நடத்தி வருகிறது. இத்தொடரில் 12 சீசன்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், 13ஆவது சீசனானது ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது.
மொத்தம் 6 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. இதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றனர். இந்நிலையில் எதிர்வரும் கரீபியன் பிரீமிய்ர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக வெஸ்ட் இண்டீஸின் முன்னாள் வீரரும், அந்த அணியின் முன்னாள் கேப்டனுமான டுவைன் பிராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.