
இங்கிலாந்து டெஸ்ட் அணியானது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டியானது நவம்பர் 28ஆம் தேதி கிறிஸ்ட்சர்ஜிலும், இரண்டாவது போட்டி டிசம்பர் 06ஆம் தேதி வெல்லிங்டனிலும், மூன்றாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 14ஆம் தேதி ஹாமில்டனிலும் நடைபெறவுள்ளது.
அந்தவகையில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது கிறிஸ்ட்சர்ச்சில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இத்தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு பின்னடைவு ஏற்பட்டது. முன்னதாக அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் பேட்டர் ஜேமி ஸ்மித தனது குழந்தை பிறப்பின் காரணமாக நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் இருந்து விலாகினார். இதனால் ஜோர்டன் காக்ஸ் அணியின் விக்கெட் கீப்பராக செயல்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் தான் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன் இங்கிலாந்து அணி பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது இந்த பயிற்சியின் போது ஜோர்டன் காக்ஸ் தனது விரல் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்றும், இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பராக ஒல்லி போப் செயல்படுவார் என்று அறிவிக்கப்பாட்டது.