
ஆஸ்திரேலியா - இந்திய அணிகளுக்கு இடையேயான பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரானது நவம்பர் 22ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. மேலும் இத்தொடரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் அங்கமாக நடைபெற இருப்பதால், இதில் எந்த அணி வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் முன்னிலைப் பெறும் என்ற எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளன.
அதுமட்டுமின்றி இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய இரண்டு பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரையும் வென்று அசத்தியுள்ளது.இதனால், மூன்றாவது முறையாகவும் இத்தொடரை கைப்பற்றி சாதனை படைக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மறுபக்கம் அடுத்தடுத்து இரண்டு முறை இத்தொடரை இழந்திருக்கும் ஆஸ்திரேலிய அணி இம்முறை தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவின் அசாதாரண பந்துவீச்சை எதிர்கொள்ள ஆரம்பத்தில் கடினமாக இருந்தாலும்,தொடர்ந்து எதிர்கொள்வதன் மூலம் பந்துவீச்சை விளையாடுவது எளிதாக மாறுகிறது என ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் உஸ்மான் கவாஜா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “நீங்கள் பும்ராவை முதலில் எதிர்கொள்ளும் போது, அவருடைய பந்துவீச்சு முறையை கணிக்க சற்று சிரமப்படுவீர்கள்.