
உலக கோப்பைக்கு முன்பாக, உலகக்கோப்பை அணியில் இடம் பெறக்கூடிய யாருக்கெல்லாம் வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறதோ, அவர்கள் எல்லோரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இந்திய அணியில் எல்லோரும் தங்களுக்கான வாய்ப்பை பயன்படுத்தி தங்களை நிரூபித்திருந்த நிலையில், ஸ்ரேயாஸ் மற்றும் சூர்யகுமார் இருவர் மட்டுமே வாய்ப்புகளைப் பயன்படுத்தி சிறப்பாக ஏதும் செய்யாமல் இருந்தார்கள்.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் போட்டியில் அரைசதம் அடித்து சூர்யகுமார் ஒருநாள் கிரிக்கெட்டில் எப்படி பேட்டிங்கை அணுக வேண்டும் என்பதை கண்டுபிடித்துக் கொண்டார். இதனால் ஸ்ரேயாஸ் மட்டுமே தன்னை நிரூபிக்க வேண்டிய தேவை இருந்தது. இப்படி ஒரு அழுத்தத்தில் இருந்து இன்றைய போட்டிக்கு விளையாட வந்த அவர், யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ஆரம்பத்தில் இருந்து தைரியமான அணுகுமுறையை வெளிப்படுத்தி விளையாடி சதம் அடித்தார்.
இந்நிலையில் நேற்றைய போட்டியில் ஆட்டநாயகன் விருது பெற்ற ஸ்ரேயாஸ் ஐயர், “இது ஒரு ரோலர் கோஸ்டர் மாதிரி இருக்கிறது. இது அருமையான உணர்வு. எனது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மற்றும் அணியினர் எனக்கு ஆதரவாக இருந்தனர். நான் டிவியில் போட்டிகளை பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் நான் அணிக்குள் வந்து விளையாட விரும்பினேன். என்னை நம்பியதற்கு நன்றி.