
ரோஹித், கோலி யாருடைய விக்கெட் கடினம்? - கைல் மேயர்ஸ் பதில்! (Image Source: Google)
இந்திய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களை இந்திய அணி எதிர்பார்த்தபடி கைப்பற்றி இருக்கிறது.
ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருந்த நிலையில் நாளை இரண்டாவது போட்டி நடக்க இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் டி20 அணியில் இடம்பெறாமல் நாடு திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ஒரு பேட்டியின் போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் இடம் விராட் கோலி மற்றும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா குறித்து சில கேள்விகள் முன் வைத்தார்கள். அதற்கு அவரும் பதிலளித்திருக்கிறார்.