
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. மேற்கொண்டு இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ள காரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இத்தொடருக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிலும் விராட் கோலி போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து திடீரென ஓய்வை அறிவித்துள்ளது ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதன் காரணமாக இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி கேப்டனாக ஷுப்மன் கில்லும், அணியின் துணைக்கேப்டனாக ரிஷப் பந்தும் நியமிக்கபப்ட்டுள்ளனர். மேற்கொண்டு ரோஹித், விராட் கோலியின் இடங்களை நிரப்பும் வகையில் சாய் சுதர்ஷன், கருண் நாயர் உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் விராட் கோலி விட்டுச்சென்றுள்ள வெற்றிடம் தற்சமயம் இந்திய அணி பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.