
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சாதனைகளை குவித்த விராட் கோலி! (Image Source: Google)
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சாம்பியன்ஸ் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அசத்தியது. இப்போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 84 ரன்களைச் சேர்த்து அசத்தினார்.
இதன்மூலம் இப்போட்டியின் ஆட்டநாயகன் விருதையும் விராட் கோலி கைப்பற்றி அசத்தினார். இந்நிலையில் இப்போட்டியில் விராட் கோலி சதம் அடிக்க தவறினாலும், இந்த போட்டியில் அவர் அரைசதம் கடந்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் பல தனித்துவமான சாதனைகளை படைத்துள்ளார்.
ஐசிசி நாக் அவுட் போட்டியில் 1000 ரன்கள்