Advertisement

IND vs SL, 1st ODI: இமால சாதனைகளை நிகழ்த்திய கோலி, ரோஹித்!

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 12,500 ரன்களை கடந்த முதல் வீரர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். 

Advertisement
Virat Kohli becomes the fastest to complete 12500 runs in ODI history!
Virat Kohli becomes the fastest to complete 12500 runs in ODI history! (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Jan 10, 2023 • 05:31 PM

இந்தியா வந்துள்ள இலங்கை அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி 1-2 என்ற கணக்கில் தொடரை இழந்தது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் துவங்கி நடைபெறவுள்ளது. இன்று கௌகாத்தியில் துவங்கவுள்ள முதல் போட்டிக்கான டாஸை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

Bharathi Kannan
By Bharathi Kannan
January 10, 2023 • 05:31 PM

அதன்படி களமிறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் சர்மா - ஷுப்மன் கில் இணை அதிரடியான தொடக்கத்தைக் கொடுத்தனர்.இதனால், பவர் பிளேவில் இந்திய அணி 75/10 ரன்களை குவித்து அசத்தியது. இதனைத் தொடர்ந்து ரோஹித் சர்மா, ஷுப்மன் கில் இருவரும் அரை சதம் கடந்து அசத்தினார்கள். இந்நிலையில், கில் 70 ரன்கள் சேர்த்த நிலையில், ஷனகா பந்துவீச்சில் அவுட்டாகி நடையைக் கட்டினார். இவர் 11 பவுண்டரிகளை அடித்திருந்தார்.

Trending

தொடர்ந்து ரோஹித் சர்மா அபாரமாக விளையாடி வந்த நிலையில் 67 பந்துகளில் 9 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் உட்பட 83 ரன்களை எடுத்து, இடது கை வேகப்பந்து வீச்சாளர் மதுஷங்கா பந்துவீச்சில் போல்ட் ஆனார். இப்போட்டியில் ரோஹித் ஷர்மா 83 ரன்களை அடித்ததன் மூலம், ஓபனராக ஒருநாள் கிரிக்கெட்டில் 7,500 ரன்களை அதிவேகமாக கடந்த முதல் வீரர் என்ற சாதனையை ரோஹித் ஷர்மா படைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர் ஆகியோர் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அப்போது ஸ்ரேயஸ் ஐயர் 28 ரன்களில் ஆட்டமிழக்க, கேஎல் ராகுல் 39, ஹர்திக் பாண்டியா 14 ரன்கள் என ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர். இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த விராட் கோலி எதிரணி பந்துவீச்சை சிதறடித்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 45ஆவது சதத்தைப் பதிவுசெய்து அசத்தினார். 

அதன்பின் 87 பந்துகளில் 12 பவுண்டரி, ஒரு சிக்சர் என 113 ரன்களை எடுத்திருந்த விராட் கோலி கசுன் ரஜிதா பந்துவீச்சில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார். இதனால் 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 373 ரன்களைச் சேர்த்தது. இலங்கை தரப்பில் கசுன் ரஜிதா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இப்போட்டியில் விராட் கோலி சதமடித்ததன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 12,500 ரன்களை விளாசிய முதல் வீரர் எனும் சாதனையை நிகழ்த்தியுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் 310 இன்னிங்ஸ்களில் 12,500 ரன்களை எடுத்திருந்ததே சாதனையாக இருந்தது. அதனை தற்போது விராட் கோலி 257 இன்னிங்ஸ்களில் கடந்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளார்.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement