
இந்திய அணி தற்சமயம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடைபெற்று முடிந்த மூன்று போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவுசெய்து 1-1 என்ற கணக்கில் தொடரை சமன்செய்திருந்தன. அதேசமயம் இரு அணிகளுக்கும் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியானது டிராவில் முடிவடைந்துள்ளது.
தையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியானது எதிர்வரும் டிசம்பர் 26அம் தேதில் மெல்போர்னில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி தொடரில் முன்னிலைப் பெறும் என்பதால் கூடுதல் எதிர்பார்ப்புகளும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிக்கான இரு அணிகளையும் அந்தந்த நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் சமீபத்தில் அறிவித்தது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கரின் மிகப்பெரிய சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை விராட் கோலி பெற்றுள்ளார். அதன்படி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் அதிக ரன்கள் எடுத்த இந்த வீரர் எனும் சாதனையை சச்சின் டெண்டுல்கர் தற்போது வரை தன்வசம் வைத்துள்ளார். அவர் இங்கு 10 இன்னிங்ஸ்களில் 449 ரன்களைக் குவித்துள்ளார்.