
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் மிகப்பெரிய போட்டி நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்றஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து ஆச்சரியப்படுத்தினார். ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் என்று அவர் கூறியிருந்தார்.
ஆஸ்திரேலிய தரப்பில் ஹெட் மற்றும் ஸ்டாய்னிஸ் ஆகிய நட்சத்திர வீரர்கள் இடம் பெறவில்லை. இந்திய அணி தரப்பில் இளம் நட்சத்திர வீரர் சுப்மன் கில் இடம் பெறவில்லை. அவருடைய காயம் குணமடையவில்லை என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்திருந்தார்.அதே சமயத்தில் இந்திய அணி விக்கெட் காய்ந்து இருக்கும் காரணத்தினால் மூன்றாவது சுழற் பந்துவீச்சாளராக தமிழகத்தின் ரவிச்சந்திரன் அஸ்வினை கொண்டு வந்திருக்கிறது.
இதையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஷ் இருவரும் களமிறங்கினார்கள். போட்டியின் முதல் ஓவரை பும்ரா வீச வார்னர் ஒரு ரன் மட்டும் எடுத்தார். இதற்கு அடுத்து சிராஜ் வீசிய ஓவரில் ஒரு பவுண்டரி மூலம் நான்கு ரன்கள் வந்தது. இரண்டு ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பில்லாமல் ஐந்து ரன்கள் எடுத்திருந்தது.