
இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் வீரர் விராட் கோலி. இவர் இந்திய அணிக்காக கடந்த 2009ஆம் ஆண்டு அறிமுகமானதிலிருந்து தற்போது வரையிலும் ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் என அனைத்து வடிவங்களிலும் தனது முத்திரையை பதித்துள்ளதுடன், பல சாதனைகளையும் படைத்துள்ளார்.
மேற்கொண்டு மகேந்திர சிங் தோனி டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விலகிய நிலையில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்ட விராட் கோலி தனது ஆக்ரோஷமான அணுகுமுறையின் காரணமாக சேனா நாடுகளில் வெற்றிகளைக் குவித்ததுடன் பல்வேறு சாதனைகளையும் படைத்து அசத்தினார். ஆனால் கடந்த 2020ஆம் ஆண்டிற்கு பிறகு அவரது பேட்டின் ஃபார்ம் சரிவை சந்தித்ததை தொடர்ந்து அவர் மீதான விமர்சனங்களும் அதிகரிக்க தொடங்கி இருந்தது.
மேலும் இந்த காலகட்டத்தில் அவர் 37 டெஸ்ட் போட்டிகளில் போட்டிகளில் விளையாடி மூன்று சதங்களுடன் 1990 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார். இதுதவிர்த்து நடந்து முடிந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரிலும் ஒரு சதத்தை மாட்டுமே அடித்திருந்த நிலையில் மற்ற போட்டிகளில் அவர் பெருமளவில் ரன்களைச் சேர்க்க தவறி இருந்தர். இந்நிலையில் அவர் சாம்பியன்ஸ் கோப்பை மற்றும் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி ரன்களைக் குவித்து வருகிறார்.