
இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி வரை வெற்றிகரமாக பயணத்தை இந்திய அணியானது ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் தோல்வியை சந்தித்து மீண்டும் ஒருமுறை ஐசிசி சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்தது.
இதன் காரணமாக அடுத்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பையை கருத்தில் கொண்டு சில மாற்றங்களை இந்திய அணி செய்துள்ளது. அந்த வகையில் ஏற்கனவே இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ டி20 கிரிக்கெட்டில் அதிகளவு இளம் வீரர்களுக்கு வாய்ப்பினை வழங்கி ஒரு பலமான அணியை தயார் செய்து வருகிறது.
அந்த வகையில் இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியானது நான்குக்கு ஒன்று (4-1) என்ற கணக்கில் கைப்பற்றியது. இதனை தொடர்ந்து தென் ஆப்பிரிக்க நாட்டிற்கு தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியின் டி20 கேப்டனாகவும் சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.