
ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நாளை ஞாயிற்றுக்கிழமை பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ள உள்ளது. இந்தத் தொடரில் நாளைய போட்டியில் யார் வெற்றி பெறுகிறார்களோ அவர்கள் புள்ளி பட்டியலில் நம்பர் ஒன் இடத்தை பெற்று விடுவார்கள். இதன் காரணமாக இந்திய அணி வீரர்கள் இன்று கொல்கத்தாவில் பயிற்சி முகாமில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இந்த போட்டி குறித்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அதில் பேசிய அவர் “ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் பிரசித் கிருஷ்ணா சேர்க்கப்பட்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து டிராவிட்டிடம் கேள்வி வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் ஹர்திக் பாண்டியா காயம் அடைந்த பிறகு இந்திய அணி தொடர்ந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களை வைத்து விளையாடி வருகிறது. இந்த மூன்று வீரர்களுக்கும் வேறு எந்த மாற்று வேகப்பந்துவீச்சாளரும் தற்போது வரை அணியில் இல்லை.
இதனால் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாங்கள் பிரசித் கிருஷ்ணாவை ஹர்திக் பாண்டியாவுக்கு மாற்று வீரராக சேர்த்தோம். எங்கள் அணியில் தற்போது ஆறாவது வேகப்பந்துவீச்சாளர் இல்லை. ஆனால் எங்களிடம் ஒரு வீரர் இருக்கிறார். அவர் பந்துவீச்சு ஸ்டைல் வித்தியாசமாக இருக்கும். ஆனால் நல்ல இன்ஸ்விங்களை வீசக்கூடிய பிரமாதமான நபர்.