Advertisement

சாம்பியன்ஸ் கோப்பை 2025: சங்கக்காரவின் சாதனையை முறியடிப்பாரா கோலி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.

Advertisement
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சங்கக்காரவின் சாதனையை முறியடிப்பாரா கோலி?
சாம்பியன்ஸ் கோப்பை 2025: சங்கக்காரவின் சாதனையை முறியடிப்பாரா கோலி? (Image Source: Google)
Bharathi Kannan
By Bharathi Kannan
Mar 03, 2025 • 01:59 PM

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரானது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்றிருந்த இத்தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் முன்னேறியுள்ளன.

Bharathi Kannan
By Bharathi Kannan
March 03, 2025 • 01:59 PM

இதில் நாளை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இப்போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் இப்போட்டியின் மூலம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சில சாதனைகளை படைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். 

Trending

அதிக கேட்சுகள்

இந்தப் போட்டியில் விராட் கோலி ஒரு கேட்ச் பிடித்தால், சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக கேட்ச் பிடித்த வீரர் என்ற பெருமையை பெறுவார். இதுவரை இந்திய அணிக்காக 548 சர்வதேச போட்டிகளில் 657 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள விராட் கோலி 334 கேட்ச்களை பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில், முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் 509 போட்டிகளில் 571 இன்னிங்ஸ்களில் 334 கேட்சுகளை எடுத்து கூட்டாக முதலிடத்தில் உள்ளார்.

இது தவிர, விராட் கோலி இரண்டு கேட்ச்களை பிடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் போர்ட்டிகளில் அதிக கேட்ச்சுகளை பிடித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையையும் பெறுவார். இந்த பட்டியலில் தற்போது ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் 160 கேட்ச்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேசமயம் விராட் கோலி 159 கேட்ச்சுகளை பிடித்து மூன்றாம் இடத்தில் உள்ளார்.  இந்த பட்டியலில் இலங்கை வீரர் மஹேலா ஜெயவர்த்னே 218 கேட்சுகளுடன் முதலிடத்தில் உள்ளார். 

குமார் சங்கக்காரவின் வீழ்த்தும் வாய்ப்பு

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இப்போட்டியில் விராட் கோலி 139 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்களை குவித்த இரண்டாவது வீரர் எனும் பெருமையைப் பெறுவார். தற்போது இந்த பட்டியலில் இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்கக்கார 404 போட்டிகளில் விளையாடி 14234 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார். அதேசமயம் விராட் கோலி 300 போட்டிகளில் 14096 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read: Funding To Save Test Cricket

நடப்பு சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட் கோலியின் ஃபார்ம் பெரிதளவில் இல்லை. அவர் இத்தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் சதமடித்ததை தவிர்த்து, வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து போட்டிகளில் பெரிதளவில் ரன்களைச் சேர்க்க தவறவுள்ளார். இருப்பினும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கோலியின் ஃபார்ம் சிறப்பாக உள்ளது. அவர் அந்த அணிக்கு எதிராக 49 ஒருநாள் போட்டிகளில் 53.79 சராசரியுடன் 2,367 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 சதங்கள் மற்றும் 14 அரை சதங்களையும் அடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Win Big, Make Your Cricket Tales Now

Advertisement