
சர்வதேச கிரிக்கெட்டில் யார் சிறந்த வீரர் என்று விராட் கோலி ரசிகர்களுக்கும் ரோஹித் சர்மா ரசிகர்களுக்கும் அடிக்கடி மோதல் ஏற்படும். இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இமாம் உல் ஹக்கிடம் கேள்வி கேட்கப்பட்டது . அதற்கு அவர் பளிச்சென்று ஒரு பதிலை அளித்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் சச்சின் சாதனையை உடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கும் ஒரே வீரர் விராட் கோலி தான் என ஒரு காலத்தில் ரசிகர்கள் நம்பினர். சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி எழுபது சதங்களை இதுவரை விளாசியுள்ளார். ஆனால் ரோஹித் சர்மாவும் முதல் மூன்று ஆண்டுகளில் சாதாரண வீரராக வலம் வந்தாலும், தொடக்க வீரராக வாய்ப்பு கிடைத்த பிறகு தனது அதிரடியை காட்டி வேற லெவலுக்கு சென்றார் .
அதிக இரட்டை சதம் விளாசிய வீரர் என்ற பெருமையும் ரோகித் சர்மா பெற்றார். ஆனால் உலகின் டாப் நான்கு சிறந்த வீரர்கள் என தலைசிறந்த நான்கு வீரர்கள் என அழைக்கப்படும் வீரர்களில் விராட் கோலி மட்டும் தான் இடம் பெற்றுள்ளார். அதில் ரோகித் சர்மா கிடையாது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விராட் கோலியின் கையே ஓங்கி இருக்கிறது.