டி20 உலகக்கோப்பை 2024: தொடக்க வீரர் இடத்தில் விராட் கோலி; அதிரடி வீரருக்கு வாய்ப்பு?
வரவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தாண்டு ஜூன் மாதம் ஐசிசி நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடைபெறவுள்ளது. எப்போதும் இல்லாத அளவின் இந்த முறை டி20 உலகக்கோப்பை தொடர் 20 அணிகளைக் கொண்ட நடத்தப்படவுள்ளது. அதன்படி இந்த அணிகள் நான்கு குழுக்களாக பிரிக்கப்பட்டதுடன், போட்டி அட்டவணையையும் ஐசிசி சமீபத்தில் அறிவித்திருந்தது. இதனால் இத்தொடரில் சாம்பியன் பட்டம் வெல்வதற்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயராகி வருகின்றன.
இந்நிலையில் இத்தொடருக்கான இந்திய அணி இம்மாத இறுதியில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடப்பு ஐபிஎல் தொடரைப் பொறுத்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு இருக்கும் என்பதால் இந்திய வீரர்கள் சிறப்பாக செயல்பட ஆர்வம் காட்டிவருகின்றனர். அதிலும் குறிப்பாக இந்திய அணி தேர்வாளர்கள் பெரும்பாலான ஐபிஎல் போட்டிகளை நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார்கள்.
Trending
இதனால் நடப்பு டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் யார் யார் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. அதேசமயம் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி தனது ஸ்டிரைக் ரேட்டின் காரணமாக இந்த டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடிக்க மாட்டார் என்ற தகவல்களும் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்தது.
காரணம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் உள்ள மைதானங்கள் மிகவும் மொதுவான விக்கெட்டுகளாக இருக்கும் என்பதால், அங்கு விராட் கோலியால் பெரிதளவில் சோபிக்க முடியாது என்றும், இதனால் அவரை டி20 உலகக்கோப்பை தொடருக்கான அணியிலிருந்து நீக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் தான் நடப்பு ஐபிஎல் தொடரில் விராட் கோலி இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 361 ரன்களை எடுத்ததுடன், ஆரஞ்சு தொப்பியையும் தன்வசம் வைத்துள்ளார்.
இதில் அவர் சதமடித்தும் அசத்தியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலியை புறக்கணிக்கும் எண்ணத்தை தேர்வாளர்கள் முற்றிலுமாக கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் தொடக்க வீரர் இடத்தில் இருந்த யஷஸ்வி ஜெய்ஸ்வாலின் ஆட்டமும் தேர்வாளர்களுக்கு தலைவலியை ஏற்படுத்தியது.
இதன் காரணமாக தற்போது டி20 உலகக் கோப்பையில் ரோஹித் சர்மாவுடன் இணைந்து விராட் கோலியை தொடக்க வீரராக களமிறக்க தேர்வாளர்கள் முடிவுசெய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி விராட் அணிக்கு தொடக்க வீரராக களமிறங்கினால் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது ஷுப்மான் கில் அணியில் இருந்து நீக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனெனில், இந்த இரண்டு வீரர்களில் ஒருவரை மட்டுமே உலகக் கோப்பைக்கான கூடுதல் தொடக்க வீரராக அணியில் தேர்வுக்குழு எடுக்க விரும்புகிறது.
Some Major Updates Ahead Of India's T20 World Cup Announcement! #IPL2024 #India #T20WorldCup #RiyanParag #RohitSharma #ViratKohli pic.twitter.com/1eVuxWWpfb
— CRICKETNMORE (@cricketnmore) April 17, 2024
அதிலும் நடப்பு ஐபிஎல் சீசனில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலை விட ஷுப்மான் கில்லின் பேட்டிங் சிறப்பாக உள்ளது. இதன் காரணமாக டி20 உலகக் கோப்பைக்கு ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக ஷுப்மான் கில்லையே தேர்வுக்குழுவினர் தேர்வு செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இனி வரும் போட்டிகளில் ஜெய்ஸ்வால் சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் அவருக்கான வாய்ப்பும் உள்ளது என்பதை நாம் மறந்துவிட கூடாது. இதுதவிர்த்து நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடிவரும் ரியான் பராக்கும் இந்திய அணியில் தேர்வு செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
Win Big, Make Your Cricket Tales Now