
ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை தொடரானாது வரும் ஜூன் மாதம் முதம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் கோலாகலமாக தொடங்கவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்கு இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் நாளுக்கு நாள் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும் இத்தொடருக்காக அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகியும் வருகின்றன.
இத்தொடருக்கான இந்திய அணியும் நேற்றைய தினம் அமெரிக்கா புறப்பட்டுள்ளது. அந்தவகையில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியானது குரூப் ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. மேலும் அக்குழுவில் பாகிஸ்தான், அயர்லாந்து, அமெரிக்கா மற்றும் கனடா உள்ளிட்ட அணிகளும் இடம்பிடித்துள்ளன. இதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து ஜூன் 05ஆம் தேதி விளையாடவுள்ளது.
மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஜூன் 09ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணியானது வங்கதேச அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்திலும் பங்கேற்கவுள்ளது. இந்நிலையில் வங்கதேச அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் இருந்து இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி விடுப்பு எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Virat Kohli set to miss the warm-up match against Bangladesh! pic.twitter.com/ziS9c5chsi
— CRICKETNMORE (@cricketnmore) May 26, 2024